Thursday 24 September 2015

நம்பிக்கை கொள் நலமாகும்

(வலைப்பதிவர் திருவிழா மற்றும் தமிழ் மினிலக்கிய கவிதைபோட்டி 2015 க்காக எழுதப்பட்டது)

விண்ணெழுந்த புள்ளினங்கள்  வானெழுந்து தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்  மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும் மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத் தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத் தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங் குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள் அன்னை சக்திதானும்

வெண்ணொளிக் கதிர்சிறந்து வானமேறக் காணும்
வீழ்ந்த  சின்னத் தூறலை விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன் விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம் பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட ஆனந்த வாழ்வேங்கும்

கண்ணில்காணும் காட்சிகொண்ட காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக் காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம் ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம் புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி அன்னைவேண்டு ஆகும்


இது எனது சொந்தப்படைப்பாகும். இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது.இது  வேறு எந்த இடத்திலும் வெளியிடப்ப்டமாட்டாது என்ற உறுதிமொழிகளை வழங்குகிறே]ன் 
----   கிரிகாசன்.

8 comments:

  1. விதிமுறைகளின் படி தங்களின் விவரங்களை பதிவர் கையேட்டில் பதிவு செய்ய வேண்டும் ஐயா...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_5.html

    ReplyDelete
  2. அருமையான முயற்சி! புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும்!!

    ReplyDelete
  3. கவிதை நன்று.
    தங்களைப் பற்றிய விவரங்களை விரைந்து பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  4. அருமை வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நன்றிகள் பதிந்துவிட்டேன்!!
    அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. நன்றிகள் பதிந்துவிட்டேன்!!
    அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  7. அருமையான விருத்தம்.

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அருமை அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்...!

    ReplyDelete